Saturday, November 26, 2011

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு...

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற செய்தி சில்லரை வர்த்தகம் செய்பவர்களின் காதில் தேளாய் கொட்டியிருக்கும்.பெப்சி கோக் கம்பெனிகளின் வருகை எப்படி இந்திய குளிர்பான நிறுவனங்களை ஏப்பம் விட்டதோ அதெ நிலைமைதான் சில்லரை வர்த்தகத்திலும் ஏற்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவு. தெருவில் கீரை விற்க கார்பரெட் நிறுவனங்கள் வந்தால் நம்மூர் கீரைக்காரி என்னதான் செய்வாள். இன்றைய தினம் இது பற்றி பார்க்கலாம்.
சரி சில்லரை வர்த்தகர்கள் என்பது யார்? உணவுப் பொருட்கள், சோப்பு, பவுடர் போன்றவற்றில் சில்லரை  வணிகம் செய்யும் நம்மூர் தொழிலதிபர்கள் அனைவரும் சில்லரை வியாபாரிகள். இவர்கள் அனைவருமே நல்ல உழைப்பாளிகள், திறமைசாலிகள் ஆனால் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும்,விவசாயிகளுக்கும் நேர்மையானவர்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். எப்படியெனில் இவர்கள் யாரும் அரசாங்கத்திற்கு ஒழுங்காக வரி கட்டுகிறார்களா என்றால் ஆம் என்று அவர்களே கூட சொல்ல மாட்டார்கள். கோடிஸ்வரர்கள் கூட இன்னும் சாதரண ரேசன் கார்டுகள் மட்டுமல்ல ஆயிரமோ இரண்டாயிரமோ தான் இருக்கும் படியான வரிமான வரி  சான்றிதழ் வைத்திருப்பார்கள். மேலும் விவசாயிகளிடம் விளைபொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அவர்களையும்  பாதிப்படைய செய்கின்றனர். இது இவர்களுடைய தவறு மட்டுமல்ல அதிகாரிகளின் பங்கும் உண்டு. ஆனால் அதற்காக இவர்களுடைய தவறுகளை நியாயப் படுத்தி விடமுடியாது. இலஞ்சம் வாங்குவோர் குற்றமா கொடுப்பவர் குற்றமா என்பது போலத்தான். பதுக்கல் இன்னும் சில பிரச்சனைகளும் உண்டு. இவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.
பொதுமக்களிடையே நல்ல உறவும் குறைந்து கொண்டே வருகிறது. ஏதாவது பொருட்கள் பற்றி கேள்வி கேட்பவர்கள் இவர்களைப் பொருத்தவரை சாவுகிராக்கி வாடிக்கையாளர்கள். எதுவும் கேட்காமல் அப்படியே சொன்ன விலைக்கு வாங்கும் மேல்த்தட்டு கீழ்த்தட்டு வாடிக்கையாளர்கள் நல்ல வாடிக்கையளர்கள். வாடிக்கையாளர் சேவை குறைந்து வருவது அனைவரும் அறிந்ததே. வாடிக்கையளரே நமது முதலாளி என்பது எழுத்துக்களில் மட்டுமே இருக்கும். துளியும் சேவையில் இருக்காது. உதாரணமாக நீங்கள் வாங்கிய பொருள் சரியில்லை என்று திருப்பி கொடுத்துப் பாருங்கள் அவர்களின் குணத்தை அப்போது பார்க்கலாம். சில வணிகர்கள் வாங்கிய பொருள் திருப்பி பெற்றுக்கொள்ள மாட்டாது என்றெ எழுதி வைத்திருப்பார்கள்.
பொதுமக்களிடையெ நல்ல உறவு இல்லாததே அரசு ஊழியர்களின் பல போராட்டங்கள் தோல்வியில் முடிந்ததற்கு காரணம் என்பதை நாம் அறிவோம். உதாரணமாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராட்டத்தின் போது பொதுமக்களே அதை ஆதரிக்காதது.. இதுவும் அது போலத்தான்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு யாருக்கு இலாபம் தரும்?ஏன் இதை கொண்டு வந்தார்கள்? இதன் மூலம் நன்மைகள் ஏதாவது இருக்கிறதா?
முதலில் அரசாங்கத்திற்கு என்ன இலாபம் என்பதை பார்க்கலாம். மிகப் பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகம் மொத்த விற்பனை அளவுக்கு பணமதிப்பில் உயரும்.பத்து பேர் பாக்கெட்டில் இருக்கும் பணம் ஒருவர் பாக்கெட்டில் மட்டுமே இருக்கிற நிலை ஏற்படும். முன்னெரெல்லாம் ஒரு கல்லூரி இருக்கிறெதென்றால் அதன் கேண்டின் ஒருவரது காண்டிரக்டிலும் சுத்தம் செய்வது இன்னொருவரது காண்டிரக்டிலும் இப்படியாக பலபேர் பிழைக்கும் நிலை இருந்தது. இப்பொழுதெல்லாம் எல்லாமுமே நெரடி நிர்வாகத்தில் கொண்டு வந்து பணம் வெளியே செல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். மாணவர்களின் பணம் அவர்களின் கையிலிருந்து வெளியெ செல்லக் கூடாது என்பதில் அவ்வளவு அக்கரை. சரி இதைபற்றி தனி ப்ளாக் எழுதிக் கொள்ளலாம். சொல்ல வருவது என்னவென்றால் பணம் ஒரெ இடத்தில் அதாவது வெளிநாட்டு முதாலாளிகளின் பாக்கெட்டுகளில் குவியும். இதனால் அரசாங்கத்திற்கு என்ன நன்மை என்னவென்றால் வரி கணிசமான அளவு கிடைக்கும். அவ்வளவே. சில்லரை வியாபாரிகள் ஒழுங்காக வரி கட்டியிருந்தால், விவசாயிகளை முன்னேற்றியிருந்தால், பதுக்கல், விலையேற்றம் இவற்றில் நியாயமாக நடந்திருந்தால் இவ்வளவு விலையேற்றம் வந்திருக்காது. அறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை கதை போலத்தான்.ஒருபக்கம் நல்ல விளைச்சல் இருந்தால் விலை இல்லை விளைச்சல் இல்லாவிட்டால் இமயமாய் விலையேற்றம். காய்கனிகளின் விலை எழுபது எண்பது ரூபாயை தொட்டது அனைவருக்கும் அவ்வளவு எளிதில் மறக்காது.
பொதுமக்களுக்கு என்ன நன்மையென்று பார்ப்போம். இவற்றால் ஆரம்பத்தில் கொஞ்சம் விலைகுறைவும் தரமும் கிடைக்கலாம். இது தற்காலிக பயன் மட்டுமே. அவர்களின் கையில் முழுவர்த்தகமும் வந்த பிறகு அவர்களின் இராஜாங்கம்தான்.ஆரம்பத்தில் பெப்சி கோக் கம்பெனிகள் விற்ற விலையும் இப்போது விற்கும் விலையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்க. முழுவர்த்தகமும் அவர்களின் கட்டிப்பாட்டுக்குள் செல்வது அவ்வளவு கடினம் அல்ல. தோனியும், டெண்டுல்கரும் நம்மூர் விக்ரம், சூர்யா மற்றும் நடிக நடிகைகள், இன்னும் சில பிரபலங்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்.
சுதெசி என்ற வார்த்தை இப்பொழுது கெட்ட வார்த்தையாகிவிட்டது. உலகமயமாக்கல் என்ற வார்த்தை பூஜிக்கப் படுகின்ற வார்த்தையாகிவிட்டது. ஆனால் இது ஒரு மாயவார்த்தை என்பது பொருளாதார மேதைகளுக்கு புரியாமல் போவதுதான் வருத்தமளிக்கிறது. இது ஒரு நிர்வாக திறமையின்மை என்று ஏன் மேதைகளுக்கு புரியவில்லை?.உங்கள் வீட்டை நிர்வாகம் செய்ய யார் கையிலாவது கொடுப்பீர்களா? அவர்கள் உங்களை விட திறமையாக நிர்வாகம் செய்யலாம்.உங்களைவிட அதிக பணத்தை மிச்சப் படுத்தலாம். ஆனால் அவர்கள் உங்களுக்கு சேவை செய்யவில்லை உங்களுக்கு தெரியாத ஓட்டைகள் இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா?அது போலத்தான் உலகமயமாக்கலும். உங்கள் வளங்கள் உங்களுக்கு தெரியாமலே கொள்ளையடிக்கப் படும்.முன்னெரெல்லாம் கொள்ளையர்கள் கட்டம் போட்ட சட்டையும் கழுத்தில் கைக்குட்டையுமாக இருப்பார்கள், இப்போதெல்லாம் கழுத்தில் டையும் நுனிநாக்கில் ஆங்கிலமும் தான் அடையாளம்.அதெற்காக இடதுசாரிகள் மேற்கு வங்காளத்தை வைத்தது போல் வைக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. உள்நாட்டு மக்களை உயர்த்துவது போல் இருக்க வேண்டும் என்பதே எமது நிலை.
மொத்தத்தில் ஒவ்வொருவரும் தமது கடமைகளை சரியாக செய்தால் அதாவது தன்நலம் மற்றும் பொதுநலம் இரண்டிலுமே அக்கரை செலுத்தினாலெ போதும். இவற்றில் ஏதாவது ஒன்றுதான் முக்கியம் என்று நினைத்து நடந்து கொண்டால் இன்றல்ல என்றாவது பிரச்சினைகள் வரும் என்பது அனுபவ பாடம்.


No comments:

Post a Comment