Wednesday, November 16, 2011

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்.

1.    சுமார் இருபது வருடங்களை மனதிற் கொண்டு திட்டமிடுங்கள்.
2.    உங்களுக்கு எத்தனை அறைகள் வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். சிறியதாய் நிறைய அறைகள் இருப்பதை விட பெரியதாய் ( ஒரு கட்டில்,ஒரு பீரோ,ஒரு மேசை போடுமளவிற்கும் விசாலமாக நடக்குமளவிற்கும்) இருப்பது நல்லது.
3.    கண்டிப்பாக சுற்று சுவர் எழுப்புங்கள். வீடு அழகாய் தோற்றமளிக்கும். முன்னால் முடிந்த அளவு இடம் விடுங்கள். மரம் , பூச்செடிகள் நடுங்கள்.இன்னும் அழகாய் தோற்றமளிக்கும்.
4.    வீட்டிற்கு பொதுமான வெளிச்சம் கிடைக்கும்படி திட்டமிடுங்கள். இது நீங்கள் பகலில் வெளிச்சத்திற்காக மின்சாரம் உபயோகப்படுத்துவதை தடுக்கும்.
5.    வீடு இருக்கும் இடத்தின் காற்றின் திசையை அறிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்றார் போல் ஜன்னல் வையுங்கள். உள்ளெ வரும் காற்று வெளியே செல்வதற்கும் திட்டமிடுங்கள்.  ஒரு ஜன்னல் மட்டும் வைப்பதால் பிரயோஜனமில்லை.
6.    வீட்டின் உயரத்தை திட்டமிடுங்கள். இல்லையெனில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் வீடு  தெருவை விட பள்ளமாகி விடும்.
7.    சமயலறையில் காற்றோட்டம் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment